அமெரிக்க உச்சநீதிமன்றதிற்கு புதிய நீதிபதியை தெரிவு செய்வதாக ட்ரம்ப் அறிவிப்பு

Sunday, 20 September 2020 - 9:19

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Ruth Bader Ginsburg) காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கின்ஸ்பர்க், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது 87ஆவது வயதில், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இவரின் மறைவையடுத்து குறித்த பதவிக்கு புதிய நீதிபதி ஒருவர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நவம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் குறித்த நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பயிடின் தெரிவித்துள்ளார்.