இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்த விடயம்..!

Monday, 21 September 2020 - 12:25

+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
கண்டி பூவெளிகட பகுதியில் நேற்று கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையை அடுத்து தாம் தலைமறைவானதாக வெளியான செய்தியை அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மறுத்துள்ளார்.

குறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றுமொருவரின் வீட்டில் தாம் தங்கியிருந்;ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கண்டி - பூவெளிகட பகுதியில் நேற்று இடிந்து வீழ்ந்த கட்டிடம் இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டிடத்தின் அஸ்திவாரம், கட்டுமாணம் மற்றும் நிலத்தின் நிலையற்ற தன்மை காரணமாக அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த கட்டிடம் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் அருகிலுள்ள கட்டிடங்களையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதேவேளை அனர்த்தத்திற்குள்ளான குறித்த கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் உரிய அனுமதிகளின் அடிப்படையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கண்டி மாநாகர சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடிந்து வீழ்ந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்த 20 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கண்டி - பூவெளிகட பகுதியில் நேற்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் இடிந்து அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து இந்த அனர்த்தம் நேர்ந்தது.

இந்த அனர்த்தத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

எனினும் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் குழந்தையின் தாயும், தந்தையும் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.