வீடன் விண்வெளி கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

Monday, 21 September 2020 - 19:34

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள விண்வெளி கண்காணிப்பு நிலையத்துடனான தொடர்புகள் மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனை சேர்ந்த விண்வெளி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் உள்ள இந்த நிலையத்திற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு கைச்சாத்தான ஒப்பந்தம் தற்போது காலவதியாகியுள்ளது.

ஒப்பந்தம் மீண்டும் நீடிக்கப்படாது என சுவீடன் விண்வெளி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்படாததற்கான காரணம் குறித்து நிறுவனம் எந்தவிதமான கருத்தினையும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக சீனாவின் அண்டவெளி ஆராய்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, பசிவிக் பிராந்தியத்தில் கடல்வெளி திறன்களுக்கும் குந்தகம் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அவுஸ்திரேலிய விண்வெளி கண்காணிப்பு நிலையத்துக்கு அண்மையில், அமெரிக்க நாசாவினால் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப செயற்கை கோள் நிலையமும் அமைந்துள்ளது.

அதேவேளை, சீனாவின் விண்வெளி திறன்களின் விரிவாக்கம், அதன் நவீன தொழில்நுட்ப வலையமைப்பை உள்ளடக்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போட்டித்தன்மை நிலவுகின்றது.

தென் சீன கடல் பிராந்தியத்திலும், இதேபோன்ற நிலை உள்ளமை குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.