மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று- வெளியான அதிர்ச்சி தகவல்

Thursday, 24 September 2020 - 13:11

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
மாத்தறையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது பீ.சி.ஆர் பரிசாதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தளை மாவட்ட பிரதான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ரஷ்ய விமானமொன்றில் பணியாற்றி வரும் ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேற்படி நபர் தற்போது ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி மத்தளை விமான நிலையத்தின் ஊடாக 15 பேர் கொண்ட குழு இலங்கையை வந்தடைந்ததோடு, அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனவும் மாத்தறை மாவட்ட பிரதான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த குழுவினருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது PCR பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,324ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவரும் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,142 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.