நைஜீரியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 30 பேர் பலி

Thursday, 24 September 2020 - 13:57

%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

நைஜீரியாவில் பெட்ரோல் பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மீது மோதி வெடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் நேற்று (24) காலை பெட்ரோல் ஏற்றி வந்த கொள்கலன் பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து வேறொரு வாகனம் மீது மோதியது.

இதில், கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் அருகிலிருந்த 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனம் விபத்தில் சிக்கியது.

இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் மற்றும் மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் அதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.