எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...!

Friday, 25 September 2020 - 8:14

%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21
பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் அதி தீவிர நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் சுகநலன்களை கேட்;டறிவதற்காக தென்னிந்திய நடிகர் கமலஹாசன் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்றிருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

74 வயதான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை இந்தியாவில் இதுவரையில் 57 லட்சத்து 32 ஆயிரத்து 518 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் இதுவரையில் 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்தியாவில் தொற்றுறுதியான 46 லட்சத்து 74 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.