கவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..!

Friday, 25 September 2020 - 19:35

%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D..%21
தென் கொரிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜொங் அன் தனது தனிப்பட்ட மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் அவர் மன்னிப்பு கோருவது மிகவும் அபூர்வமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோரிய அறிக்கை தென் கொரிய தலைவர் மூன் ஜே இன் இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட கொரிய தலைவரின் செயலகமான 'புளு ஹவுஸ்' தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தென் கொரிய தலைவர் மற்றும் மக்களிடம், வடகொரிய தலைவர் மன்னிப்பு கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய குடாவின் வட பிராந்திய கடல் பரப்பில், 47 வயதான ஆண் ஒருவர் மிதந்த நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் அவர் வடகொரிய கடற்படையினால் மீட்கப்பட்டு துப்பாக்கி சூட்டுக்கு உட்படுத்தி பின்னர் எரியூட்டப்பட்டதாக தென் கொரியா முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தது.

ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் இப்படியான சம்பவம் ஒன்றில் தென் கொரிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதற்கு தென் கொரிய மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் வட கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை, அவதானிக்கும் இடத்திலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான உத்தரவு தற்போதும் வட கொரியாவில் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.