இலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..!

Saturday, 26 September 2020 - 14:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றலுக்கு உள்ளான எம்.டி.நிவ் டயமன்ட் கப்பலின் நிறுவனத்திடம் கோரப்பட்ட 442 மில்லியன் ரூபா அபராத தொகையை வழங்குவதற்கு அந்த கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட அபராத மதிப்பீடாக இதற்கு முன்னர் சட்டமா அதிபரினால் 340 மில்லியன் ரூபா கோரப்பட்டது.

அதற்கு எம்.டி.நிவ் டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இறுதி மதீப்பிட்டிற்கு அமைய மேலும் 100 மில்லியன் ரூபா உட்பட 442 மில்லியன் ரூபா கோரப்பட்டது.

இதற்கயை குறித்த மேலதிக தொகையையும் வழங்குவதாக எம்.டி.நிவ் டயமன்ட கப்பலின் நிறுவனம் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.