கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

Sunday, 27 September 2020 - 6:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
நாட்டில் மேலும் நான்கு பேருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 28 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியான மூவாயிரத்து 186 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் 150 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த 44 பணிப்பெண்களுக்கும் கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த காலப்பகுதியில் ளடநஅடி.மரறயவைளூஅகய.பழஎ.டம எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.