கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேர்....!

Sunday, 27 September 2020 - 12:47

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+17+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D....%21
இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவர்களுடன் தொடர்பினை பேணிய சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி 4 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசித்துள்ள நிலையில் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் அந்த கப்பலின் பணிக்குழாமினர் திடீரென நோய் நிலைக்கு உள்ளானதால் பீ.சீ.ஆர் பரிசோதரனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் அந்த கப்பலின் பணிக்குழாமினர் கொழும்பு துறைமுகத்தில் அல்லது திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்து எவருடனும் நேரடி தொடர்பினை பேணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது.