வேகக்கட்டுப்பாட்டை இழந்த மகிழூந்து..! ஒருவர் பரிதாபமாக பலி

Sunday, 27 September 2020 - 14:27

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
திருகோணமலை பிரதான வீதியில் மகிழுர்ந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மகிழுர்ந்து எதிர்திசையில் பயணித்த முச்சக்கர வண்டியில் மோதியதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

மற்றுமொரு சிற்றூர்ந்து ஒன்றுடனும் மோதுண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான திருகோணமலையை சேர்ந்த 31 வயதுடையவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுர்ந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.