பஞ்சாப் அணியுடனான போட்டியில் சாதனை வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ் (காணொளி)

Monday, 28 September 2020 - 7:19

%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் மாயங் அகர்வால் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 106 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அங்கீத் ராஜ்புட் மற்றும் டோம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து 224 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்று வெற்றியை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் சஞ்ஜூ சம்சன் 85 ஓட்டங்களையும் ராகுல் தேவாட்டியா 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மொஹமட் ஷமி 3 விக்கட்களை வீழ்த்தினார்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் ரோயல் செலஞ்சஸ் பெங்களூரு அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.