அ.தி.மு.காவின் 15 தீர்மானங்கள்...!

Monday, 28 September 2020 - 19:14

%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+15+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியினர் ஒற்றுமையுடன் செயற்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க முயற்சித்தல், கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல என்றும், மொழி திணிப்பை உறுதியாக எதிர்ப்பதாவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.