மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்....!

Thursday, 01 October 2020 - 6:40

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....%21
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் வடமேல் மாகாணத்தின் பல பாகங்களிலம் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வீசும் காற்றின் வேகம் 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.