கொரோனா தொடர்பில் வெளியான விசேட செய்தி....!

Thursday, 01 October 2020 - 6:54

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

ஓமானில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில்; இருந்து இலங்கை வந்த கடலோடி ஒருவருக்கும், ஓமானில் இருந்து வந்த இந்திய கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம். கொவிட்-19 தொற்றிலிருந்து எவரும் குணமடையவில்லை.

இதற்கமைய, நேற்று முன்தினம் வரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 230 ஆக உள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.