விதிமுறைகளை மீறிய ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி விடுதலை...!

Thursday, 01 October 2020 - 18:50

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...%21
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தடையை மீறி பயணித்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடையை மீறி உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல முயற்சித்த நிலையில் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

அந்த பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் குடும்பத்தினரை சந்திக்க ராகல் காந்தி உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.

இதன்போது காவல்துறையினரால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பல மணி நேரங்களின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்படுகின்றன.