கொரோனாவுக்கு பின்னர் திரையரங்கில் வெளியாகவுள்ள முதலாவது தமிழ் திரைப்படம்

Friday, 02 October 2020 - 12:36

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24 ஆம் திகதி முதல் மத்திய ஊரடங்கு அறிவித்துள்ளது. 4 ஆவது கட்ட ஊரடங்களில் சில தளர்வுகளுடன் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 5 ஆவது கட்டமாக சில தளர்வுகளுடன் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குப் பின் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் எந்த தயாரிப்பாளரும் தங்கள் படத்தை வெளியிட யோசிக்கும் நிலையில் ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் துணிச்சலாக களத்தில் இறங்கியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகமான முரட்டுக்குத்து திரைப்படத்தை ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு செய்ய அதன் தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.