கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை..! அதிர்ச்சியில் திரையுலகம்

Monday, 05 October 2020 - 6:45

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88..%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான தமன்னா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றாளர்களாக சினிமா பிரபலங்களும் கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவரது பெற்றோருக்கு கொரோனா தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கதாகும்.