இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம்

Thursday, 15 October 2020 - 7:39

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு இறால் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதி இறால் மற்றும் நன்நீர் மீன் வளர்ப்பிற்கு உகந்த இடம் என ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவிலுள்ள சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இறால் மற்றும் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.