தினேஷ் கார்த்திக் திடீரென மேற்கொண்டுள்ள தீர்மானம்...!

Friday, 16 October 2020 - 19:49

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார்.

துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காகவே இந்த தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக தினேஸ் கார்திக் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் பதவி விலகலை அடுத்து அந்த பதவிக்கு இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலைமையில் இங்கிலாந்து உலக கிண்ணத்தை வென்றுள்ளதால் கொல்கத்தா அணியினை வழிநடத்துவதற்கு தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி இயன் மோர்கன் தலைமையில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.