இங்கிலாந்து அணி நாட்டிற்குள் வருவதற்கு தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சின் அனுமதி அவசியம்..!

Saturday, 17 October 2020 - 13:21

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து அணி நாட்டிற்குள் வருவதற்கு தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சின் அனுமதியை எதிர்பார்த்துள்ளது.

கொவிட் 19 தாக்கம் காரணமாக தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து அணி சென்று விளையாடுவதில் உள்ள சுகாதார ரீதியிலான பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க உள்துறை அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

இந்தநிலையில், அதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில், இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.