வவுனியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இருவர்- ஒருவர் படுகாயம்

Saturday, 17 October 2020 - 15:46

%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வவுனியா-ஓமந்தை பிரதேசத்தில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட குரோதங்கள் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தில் மற்றுமொரு நபர் பலத்த காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையொருவரும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.