மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று

Saturday, 17 October 2020 - 16:16

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+73+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 71 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,427ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 2,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,395 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.