ஜோ பைடன் மற்றும் கமலா ஹெரிஹூக்கு ஆதரவாக களமிறங்கும் பராக் ஒபாமா

Saturday, 17 October 2020 - 19:31

%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹெரிஹூக்கும் ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில் கடந்த முதலாம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்காக இராணுவ வைத்தியசாலையில்; 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பைடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

இதற்கமைய ஜோ பைடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்றுறுதியகவல்லை.

இந்த நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹெரிஸ{க்கும் ஆதரவாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பைடனுக்காக அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் போது அவர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மற்றொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் டொனால்ட் டிரம்பை விட ஜோ பைடனுக்கே ஜனாதிபதி தேர்தலில் அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.