யாழ் மண்ணிலும் சௌபாக்கியா வேலைத்திட்டம்

Saturday, 17 October 2020 - 19:34

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் வீட்டுத் தோட்டம் - சௌபாக்கியா வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

இன்று முதல் 24 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள வறுமை ஒழிப்பு சர்வதேச வாரத்துடன் இணைந்ததாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் பொருளாதார வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரிவின் ஊடாக மனைப் பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டமாக இந்த திட்டம்; முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயபலத்தின் ஊடாக கூடிய வருமானம் பெறுவோராக ஆக்கும் பொருட்டு சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் நிகழ்கால நிலமைகளை அறியும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.