பொதுத்தேர்தலில் அமோக வெற்றி - இரண்டாவது முறையாக பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்

Saturday, 17 October 2020 - 20:59

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறை வெற்றி பெற்று உள்ளார்.

இன்று இடம்பெற்ற நியூசிலாந்து பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 64 தொகுதிகளை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுதேர்தல் 4 வாரங்கள் பிற்போடப்பட்டு, இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.