5 நாட்கள் நிறைவு- CIDயினரின் பார்வையில் இருந்து மறைந்து வாழும் ரிஷாட் பதியுதீன்

Sunday, 18 October 2020 - 7:31

5+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-+CID%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனை கைது செய்யுமாறு உத்தரவிட்டு இன்றுடன் 5 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

எனினும் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவரை கைது செய்ய முடியவில்லை.

அவரை தேடி கைது செய்வதற்காக 6 காவற்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீனை தேடி மன்னார் மற்றும் கொழும்பில் உள்ள இல்லங்களுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுக்கள் சென்றிருந்தன.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவினை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பதில் காவற்துறை மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.