பூகொட காவல்நிலையத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் காவல்துறை சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேர் கைது

Sunday, 18 October 2020 - 7:43

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+

பூகொடை காவற்துறையினால் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில் காவற்துறை சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பதில் காவற்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைபொருள் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றில் பொல்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த சந்தேகநபருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பூகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ராகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட தினத்தன்று சிலர் அவரை தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் சம்பவம் தொடர்பில் காவற்துறை சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.