தலவாக்கலை நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்

Sunday, 18 October 2020 - 9:48

%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
தலவாக்கலை நகரில் உள்ள சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீவிபத்து இன்று காலை (18) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தலவாக்கலை காவல்துறையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.