மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை காவல்நிலையத்தின் செயற்பாடுகள்

Wednesday, 21 October 2020 - 9:47

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்ட கோட்டை காவல்நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுறுதியான காவற்துறை பரிசோதகர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த காவல்நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் காவல்நிலையம் தொற்று நீக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கோட்டை காவல்நிலையத்தின் இரண்டாம் மாடியில் உள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவருக்கே நேற்றைய தினம் கொவிட்;19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அந்த பிரிவு மற்றும் கோட்டை காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.