இலங்கையில் சற்று முன்னர் 609 பேருக்கு கொரோனா...!

Friday, 23 October 2020 - 18:24

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+609+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE...%21
நாட்டில் இன்றைய தினம் மேலும் 609 பேருக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் 496 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 48 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவத்துள்ளார்.

அத்துடன் பேருவளை துறைமுகத்தில் 20 பேருக்கும், காலி மீன்பிடி துறைமுகத்தில் 5 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 83 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.