ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி..!(காணொளி)

Friday, 23 October 2020 - 21:44

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
உடன் அமுலாகும் வகையில் மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரண்டு பகுதிகளுக்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பயாகல,பேருவல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 05 மணி வரை தொடரும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன்,களுத்துறை மாவட்டத்தின் குலவிட வடக்கு, குலவிட தெற்கு, மாக்கலந்தாவ, வெதவத்த ,மகுருமஸ்வில ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.