மும்பை இந்தியன்ஸ் அணி, 10 விக்கட்டுக்களினால் வெற்றி

Saturday, 24 October 2020 - 9:23

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%2C+10+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 10 விக்கட்டுக்களினால் வெற்றிப்பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டியாக சார்ஜாவில் நேற்றிரவு இந்தப் போட்டி இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை அணியில் 3 வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாமலும், 3 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

சாம் கரண் அதிகபட்சமாக 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், டெரன்ட் போல்ட் வு அதிகபட்சமாக 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ராஹுல் சஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, 115 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 12.2 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 116 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான க்யின்டன் டி கொக் 46 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 68 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

நேற்றைய வெற்றியின் மூலம், இதுவரையில் இடம்பெற்றுள்ள 10 போட்டிகளில் 7 இல் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 14 புள்ளிகளுடன், ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தோல்வியடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இதுவரையில் இடம்பெற்றுள்ள 11 போட்டிகளில் 3இல் மாத்திரம் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.