கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு (காணொளி)

Saturday, 24 October 2020 - 15:21

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா ஆகிய காவற்துறை அதிகாரப் பிரதேசங்களுக்கு இன்று இரவு 7 மணிமுதல் மீள் அறிவித்தல் வரையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் 51 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 33 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும், கொழும்பு மாவட்டத்தில் 9 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும், குளியாப்பிட்டியவில் 5 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும்;, களுத்துறை மாவட்டத்தில் 3 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு அமுலில் இருக்கிறது.