மீண்டும் திரைக்கு வரும் பிகில்..! வெளியான காரணம்..!

Saturday, 24 October 2020 - 17:21

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..%21+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
விஜய் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் இப்போது மீண்டும் புதுச்சேரியில் திரையிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்தார்.

விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதுப்படங்களை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்கள் பயப்படுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சண்முகா திரையரங்கில் பிகில் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.