நரைன் அதிரடி: வருணின் பந்துவீச்சு வியூகம்- டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா அணி (காணொளி)

Saturday, 24 October 2020 - 21:11

%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%3A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 42ஆவது போட்டி இன்று அபுதாபியில் இடம்பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக நிதிஷ் ராணா 81 ஓட்டங்களையும், சுனில் நரைன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் நோர்;ட்ஜே மற்றும் ரபாடா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில், 195 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு, பெட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக வருண் சக்ரவர்த்தி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதோடு, டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.