வாக்களித்தார் அமெரிக்க ஜனாதிபதி..!!

Sunday, 25 October 2020 - 9:28

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF..%21%21
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று சென்றுள்ளார்.

ப்ளோரிடாவில் உள்ள வெஸ்ட் பார்ம் பீச் நூலகத்தில் அவர் வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதன் போது ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், டொனால்ட் ட்ரம்ப் எனும் நபருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று சர்வதேச பரவல் காரணமாக 55 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தபால் மூல வாக்குகளின் மீது தமக்கு நம்பிக்கையில்லை எனவும் நேற்றைய தினங்களில் கருத்துத் தெரிவித்து வந்த அவர் இன்று வாக்களிப்பின் பின்னர் தபால் மூல வாக்களிப்பை விடவும் நேரடி வாக்களிப்பு பாதுகாப்பானதாகும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆதாரமற்ற கருத்துக்களை தபால் மூல வாக்களிப்பிற்கு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

தேர்தல் கலம் சூடுபிடித்துள்ள அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.