அல் கைதாவின் இரண்டாவது தலைவரும் பழி..!!

Sunday, 25 October 2020 - 10:09

%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF..%21%21
அல்-கைதாவின் முக்கிய தலைவரான அபு முஹ்ஸின் அல்-மஸ்ரி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் மத்திய கஸ்னி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுள்ளார் என ஆப்கான் தேசிய பாதுகாப்பு பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அபு முஹ்ஸின் அல்-கைதாவின் இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

அவர் மீது அமெரிக்கா தீவிரவாத குழுக்களுக்கு அனுசரனை வழங்கியமை, ஆயுதம் வழங்கியமை மற்றும் அமெரிக்கர்களை தாக்க உத்தரவிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.