அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஹொன்டாருஸ் நாடு..!!

Sunday, 25 October 2020 - 10:46

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81..%21%21
அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அணு ஆயதங்களை தடை செய்வதற்கான ஐ,நா. ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் அணு ஆயுதங்களின் வளர்ச்சி, சோதனை மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை தடை செய்யும் முதலாவது சர்வதேச விதிமுறையாக இது மாறும் என நம்பப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் புதிதாக ஹொன்டாருஸ் நாடும் கைச்சாத்திட்டுள்ளது.

எனினும் வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் இது வரை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.