கொலம்பியாவில் மில்லியனை தாண்டியது கொரோனா தொற்றாளர்கள்..!!

Sunday, 25 October 2020 - 11:19

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21%21+
லத்தீன் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (24) தினத்திற்குள் தொற்றாளர்கள் 8769 இனங்காணப்பட்டதன் பின்னர் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, மில்லியனை தாண்டியுள்ளது.

கொலம்பியாவில் முதலாவதாக கொரோனா தொற்றாளர் கடந்த மார்ச் ஆறாம் திகதியன்று இனங்காணப்பட்டார்.

இது வரையில் 30,000கும் அதிகமான தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மாத்திரம் 198 உயிரழப்புக்கள் இடம் பெற்றுள்ளது.

50 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட கொலம்பியா, கொரோனா தொற்றாளர்கள் மில்லியனை தாண்டிய நாடுகளில் 8ஆவது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.