இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

Sunday, 25 October 2020 - 11:05

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
இந்தியாவில் கொவிட்19 பரவல் அதிகரித்து வருகின்ற காலசூழ்நிலையில், சிறுவர் கடத்தல்களும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீஎன்.என் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொழில் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய, 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், வீட்டுத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட முடியும்.

எனினும் தற்போது கொவிட்19 பரவல் காரணமாக பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சிறார்களை வேலைக்குச் செல்ல பெற்றோர் அனுமதிக்கின்றனர்.

ஜெய்பூர் போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குறைந்த விலைக்கு சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் குழு ஒன்று கடந்த தினம் ஜெய்பூருக்கு அருகில் வைத்து காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.