ஸ்பெயினில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம்..!

Monday, 26 October 2020 - 8:58

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21+
ஸ்பெயினில் கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு இரவு வேளைகளில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

அவசர தீர்மானங்களுக்கு அமைய ஸ்பெயினில் பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதற்கயை ஸ்பெயினில் இரவு 11 மணிமுதல் காலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளை போன்று ஸ்பெனிலும் கொவிட்-19 இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்தாலியிலும் பல புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

அங்கு கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சுகாதார துறையினருக்கு பாரிய அழுத்தம் காணப்படுவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பிரான்ஸிலும் மீண்டும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளது.