சிலீ நாட்டின் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் ஆதரவு..!!

Monday, 26 October 2020 - 10:54

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21%21
லத்தீன் அமெரிக்க நாடான சிலீயில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் பெரும்பான்மையானோர் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

78 வீத மக்கள் இந்த வாக்கெடுப்பில் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியலமைப்பின் படி நாட்டை வழிநடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செபஸ்தியன் பினோரோ குறிப்பிட்டுள்ளார்.

சிலீ நாட்டின் தற்போதைய அரசியலைமப்பானது 1980 ஆம் வருடத்தின் போது அப்போதைய ஏகாதிபதி ஆட்சியை நடத்திய ஜெனரல் ஒகஸ்டோ பினோஷேவினால் உருவாக்கப்பட்டதாகும்.

சமூக சமத்துவத்திற்கேற்ப புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என கடந்த காலங்களில் சிலீ நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்ப்பட்டு வந்தது.

நேற்று இடம் பெற்ற வாக்கெடுப்பில் வாக்காளர்களிடம் புதிய அரசியலமைப்புக்கான விருப்பம் மற்றும் அதனை யார் உருவாக்க வேண்டும் எனவும் இரு கேள்விகள் வினவப்பட்டிருந்தது.

அதன்படி, சிலீ நாட்டு மக்களின் பெரும்பான்மையினோர், மக்களால் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.