தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி...!

Monday, 26 October 2020 - 13:55

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF...%21
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க எனப்படும் ரணசிங்க ஆராச்சிகே சங்க சிரந்தவின் மனைவி நில்மினி பிரியதர்ஷினியையும் அவரின் உறவினரின் மகன் ஒருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உஸ்வெட்டகெய்யாவ – புபுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் அதிசொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்றில் கிராண்ட்பாஸ் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் களனி பிரிவு குற்றவியல் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயினும் 60 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எவ்வாறிப்பினும் குறித்த ஜீப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.

கைதுசெய்யப்பட்ட புளுமெண்டல் சங்கவின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரின் ஹேனமுல்ல அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பணம் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்இ கொழும்பு – 15 மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் புளுமெண்டல் சங்கவின் உறவினர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரதான போதைப்பொருள் வர்த்தகரான புளுமெண்டல் சங்கவின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் இருந்து கடந்த காலங்களில் 200 இலட்சம் ரூபா பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.