தபால் மூலம் மருந்துகளை பெற்று கொள்வது தொடர்பில் வெளியான செய்தி..!!

Monday, 26 October 2020 - 15:28

%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21
அரச மருத்துவமனைகளில் வெளிநோயாளர் பிரிவுகளின் ஊடாக சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு தபால் ஊடாக மருந்துகளை வழங்கும் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட மருத்துவமனைகளின் வெளிநோயாளர்களுக்கு, நாளை முதல் மருந்துகள் தபால் மூலமாக வீடுகளுக்கே விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் மருந்தக புத்தகங்களில் பதியப்பட்டுள்ள முகவரிக்கு மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் நோயாளிகளின் முகவரிகளில் மாற்றங்கள் இருப்பின் நோயாளிகள் மருந்தக தேவைக்காக செல்லும் வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.