இந்தியாவில் குறைவடையும் கொரோனா தொற்று

Monday, 26 October 2020 - 15:42

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களுள் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 480 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுள் பதிவாகிய குறைந்த உயிரிழப்புகள் இதுவாகும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான 24 மணித்தியாலங்களுள் புதிய கொரோனா தொற்றாளர்கள் 45,148 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் 90,000ம் அதிகமானோர் இனங்காணப்பட்டும், தினசரி ஆயரிம் உயிரிழப்புக்களும் பதிவாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.