கொழும்பு நகரின் சில பகுதிகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை (காணொளி)

Monday, 26 October 2020 - 15:30

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெனிங் சந்தையில் இன்று கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய தினம் கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதி, குணசிங்கபுர, மத்திய பேருந்து தரிப்பிடம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை, பொது பேருந்து தரிப்பிடங்கள் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு களஞ்சியசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.