சற்று முன்னர் வெளியான செய்தி - ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது..!

Tuesday, 27 October 2020 - 9:44

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81..%21
ஹட்டன் நகரம் உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குப்பட்ட பகுதியில் இதுவரையில் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பகுதியில் இதுவரையில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். காமதேவன் குறிப்பிட்டார்.

அவர்களுடன் நேரடி தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனையடுத்து ஹட்டன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை அக்கரப்பத்தனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா தோட்டப்பகுதியில் ஒருவருக்கு தொற்றுதியாகியுள்ளது.

பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 23 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் தற்போது தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பதுளை - ஹப்புத்தளை தோட்டப் பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், அவருடன் தொடர்புடைய மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அந்த பகுதியில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு, முரக்கொட்டாஞ்சேனை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகைய்யா தாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, பேலியகொடை கொத்தணி தொடர்பின் அடிப்படையில் மன்னாரில் கொரோனா தொற்றுறுதியான இருவர் கொழும்பில் இருந்து மன்னாருக்கு பயணித்த பேருந்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மூவர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பர்டன், இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும், 162 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் தொற்றுறுதியான ஒருவர், கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமல் இருந்த நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவராவார்.

குருநகரைச் சேர்ந்த இருவர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஒருவர் மன்னார் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த தென் பகுதியை சேர்ந்தவர் என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.