அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு..!!

Tuesday, 27 October 2020 - 11:02

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21%21
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில், கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நூற்றுக்கு 24 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 4 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், 5 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

இந்த மரண எண்ணிக்கையானது, குறித்த காலப்பகுதிக்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் 15 வீத அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்தியாவில் கடந்த 3 மாதங்களின் பின்னர் நாளொன்றில் குறைந்தளவான கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 36 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி 36 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

குறித்த எண்ணிக்கையானது, கடந்த மாதமளவில் 90 ஆயிரம் வரையில் அதிகரித்துடன், தற்போது மீண்டும் வீழ்ச்சிப்போக்கை அடைந்துள்ளது.

இதேநேரம், தமிழகத்தில் நேற்று 70 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.

32 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.

4 ஆயிரத்து 14 பேர் நேற்று குணமடைந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

29 ஆயிரத்து 268 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.