தமிழகத்தில் நேற்று 70 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா

Tuesday, 27 October 2020 - 11:52

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+70+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+898+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+
தமிழகத்தில் நேற்று 70 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது.

32 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.

4 ஆயிரத்து 14 பேர் நேற்று குணமடைந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

29 ஆயிரத்து 268 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.